Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து சரியும் தேவரா படத்தின் வசூல்… நஷ்டத்தைத் தவிக்குமா?

தொடர்ந்து சரியும் தேவரா படத்தின் வசூல்… நஷ்டத்தைத் தவிக்குமா?

vinoth

, செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:39 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேவரா படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படம் பெரியளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அடுத்த இரண்டு நாட்களின் மொத்த வசூல் முதல் நாள் வசூலைத் தொடவில்லை. மூன்று நாட்களில் 304 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படம் மொத்தமாக 600 கோடி ரூபாய் அளவுக்காவது வசூலித்தால்தான் நஷ்டத்தைத் தவிர்க்கும் என சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு படத்தின் பட்ஜெட் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பாலிவுட் நடிகர் கோவிந்தா.. என்ன ஆச்சு?