நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்,
தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் வந்துள்ளது. கை, கால்களை வெட்டுவோம் என கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடுத்து அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.