ராஷ்மிகா மந்தானா மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இரண்டு படங்களுக்கு பின்னர் மொழி எல்லையை தாண்டி மக்கள் மனதில் இடம்பெற்றார்.
இப்போது கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார். ஆம், சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு படத்தில் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ராஷ்மிகா மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் உருவாகும் அப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக ராஷ்மிகா நடிக்க உள்ளார்.