Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநில போலீஸ் உடையில் ரஜினி - மீண்டும் லீக்கான தர்பார் ஸ்டில்ஸ்!

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (10:58 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின்  ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அடிக்கடி இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ , போட்டோஸ் உள்ளிட்டவை வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடையவைத்து வருகிறது. 


 
அந்த வகையில்  தற்போது மீண்டும் தர்பார் படத்தின் ஷீட்டிங் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. இதில் மும்பை போலீஸ் உடை அணிந்து ரஜினிகாந்த் கெத்தாக நடந்து வருகிறார். அடிக்கடி இப்படி படப்பிடிப்பு தளங்களில் இருந்து புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியாகி படத்தின் ரகசியங்ககள் கசிந்து வருவதால் படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   மேலும் எப்படி இது வெளியானது என்ற தீவிர விசாரணையிலும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments