Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் ராக்கர்ஸூக்கு போட்டியாக வாட்ஸ் ஆப்பிலும் தர்பார் – ஷாக்கான லைகா !

Advertiesment
தமிழ் ராக்கர்ஸூக்கு போட்டியாக வாட்ஸ் ஆப்பிலும் தர்பார் – ஷாக்கான லைகா !
, ஞாயிறு, 12 ஜனவரி 2020 (09:21 IST)
தர்பார் படம் முழுவதுமாக வாட்ஸ் ஆப்பில் வெளியானதால் லைகா நிறுவனம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி முதல் நாள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் அதன் பிறகு வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிருப்தியில் இருக்க அவர்களை மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக பைரஸி பிரச்சனை எழும்பியுள்ளது.

வழக்கமாக தமிழ் படங்கள் வெளியாகும் போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகும். ஆனால் இம்முறை தர்பார் முழு படமும் துண்டு துண்டு வீடியோக்களாக வாட்ஸ் ஆப்பிலேயே பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து லைகா நிறுவனம் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனருக்குப் புகார் ஒன்றை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் வெற்றிமாறன் , சூர்யா படம் – டைட்டில் இதுதான் !