Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (17:22 IST)
18 வயதுக்குள் குறைவான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜானி மாஸ்டர் போக்சோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தமிழ்-தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன மாஸ்டர் ஜானி மீது இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில், தனக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளதையும், அதனை பெறும் விழாவில் கலந்து கொள்ள வேண்டியதையும் குறிப்பிட்டு, அதற்காக ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். இதனை அடுத்து, ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய விருது பெற்ற பிறகு, அவர் மீண்டும் சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டத்தில் இந்த வழக்கு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!

ஏஆர் ரகுமான் விவாகரத்து அறிவிப்பு.. சில நிமிடங்களில் கிதார் கலைஞர் மோகினி விவாகரத்து அறிவிப்பு..!

வைரல் நாயகி பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

கூலி படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்… நாளுக்கு நாள் அதிகமாகும் நட்சத்திர பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்