Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலிஸாகும் CWC புகழின் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

vinoth
செவ்வாய், 29 ஜூலை 2025 (08:11 IST)
விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் புகழ். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்  ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பின்னரும் ரிலீஸ் பற்றி முறையான எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு மிருகக்காட்சி சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒட்டியக் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை தாய்லாந்துக்கு சென்று படக்குழுவினர் படமாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலிஸாகும் CWC புகழின் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

கமலுக்கு ‘ஆரம்பிச்சிர்லாங்களா?’.. ரஜினி சாருக்கு ‘முடிச்சிர்லாமா?’- லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தள்ளிவைக்கப்பட்ட அனிருத்தின் இசைக் கச்சேரி… மீண்டும் நடப்பது எங்கே? எப்போது?

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments