Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு ‘ஆரம்பிச்சிர்லாங்களா?’.. ரஜினி சாருக்கு ‘முடிச்சிர்லாமா?’- லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 29 ஜூலை 2025 (08:05 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் ரஜினிகாந்த் பேசும்போது ‘முடிச்சிர்லாமா?’ என்ற வசனம் கவனம் ஈர்த்தது. அது பற்றி பேசியுள்ள லோகேஷ் “கமல் சாருக்கு விக்ரம் படத்தில் ‘ஆரம்பிக்கலாங்களா?’ என்ற வசனம் வைத்தோம்.  அதனால் இந்த படத்தில் ரஜினி சாருக்கு ‘முடிச்சிர்லாமா’ என்று யோசித்தோம். அந்த வசனம் படத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அது இடைவேளையில் ஒரு முக்கியமன இடத்தில் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments