Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபிக் குத்து பாடலைக் கேட்டு அழுகையை நிறுத்திய குழந்தை….வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:19 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்தது. இந்நிலையில் நேற்று இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் கையில் இருக்கும் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்க, தொலைக்காட்சியில் அரபிக்குத்து பாடல் ஓடும் சத்தம் கேட்டதும் உடனடியாக அழுகை நிப்பாட்டிவிட்டு பாடலைப் பார்க்க ஆரம்பிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments