Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயிக்கு தடையில்லை; ராதாரவிக்கு சம்மன் – டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம் !

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (14:28 IST)
டப்பிங் யூனியன் சார்பாக பாடகி மற்றும் பின்னணிக் குரல் கலைஞர் சின்மயிக்கு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். அதில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியும் ஒருவர். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து செய்தி வெளியிட்ட டப்பிங் யூனியன் சின்மயி கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது. இது தன்னை முடக்கும் செயல் எனக் கூறிய சின்மயி இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார்.

அந்த வழக்கை விசாரித்த சின்மயி மீதான தடைக்கு நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் மார்ச் 25ஆம் தேதியன்று ராதாரவி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சின்மயி  தனது டிவிட்டரில் ‘எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் பின்னர் சட்டப்போர் நடக்க இருக்கிறது. நீதிவெல்லும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்