Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சங்க வாக்குகளை எண்ணக் கூடாது – நீதிமன்றம் மீண்டும் தடை !

நடிகர் சங்க வாக்குகளை எண்ணக் கூடாது – நீதிமன்றம் மீண்டும் தடை !
, செவ்வாய், 9 ஜூலை 2019 (08:49 IST)
நடிகர் சங்கத்துக்காக நடந்து முடிந்த தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடகக இருந்த நடிகர் சங்க தேர்தலில் பல்வேறு குளறுபடி இருப்பதாக சங்கரதாஸ் அணியினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக தேர்தலை நடத்துவது ஓய்வு பெற்ற நீதிபதியா? அல்லது விஷாலா? என்ற கேள்வியை சங்கரதாஸ் அணியினர் எழுப்பினர். மேலும் வாக்காளர் பட்டியலிலும் ஏகப்பட்ட குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சங்கத்தில் இருந்து 100 உறுப்பினர்கள் நீக்கப்பட்டு 400 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் இடம் குறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் உள்ளது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என்று மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலை நடத்தி மீண்டும் பதவியை பிடிக்க வேண்டும் என்று விஷால் தீவிர முயற்சியில் இருந்தார். இதற்காக ஒருசில லட்சங்கள் பாண்டவர் அணியினர் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்காமல் இன்று விஷால், கவர்னரை சந்தித்ததும் ஆளும் கட்சியை அதிருப்தி செய்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஊடகங்களால் பில்டப் செய்யப்பட்டு வந்த நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது ஒருவகையில் நன்மையே என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் நீதிமன்றம் அளித்த உத்தரவால் ஜூன் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த மட்டும் அனுமதி அளித்தும் வாக்குகளை எண்ண அனுமதி மறுத்தும் உத்தரவிட்டது. இதையடுத்துத் தேர்தலும் களேபரமாக நடந்து முடிந்தது. அதையடுத்து நேற்று இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை நேற்று வந்தபோது  வாக்குகளை எண்ண அனுமதி அளிக்கக் கோரி விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாமினேஷனில் சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்