Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு எகிறியடிக்குமா பிகில்? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (14:25 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் மீது உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் ட்ரெண்ட் ஆனது. பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து பிரபலங்களும் பிகில் ட்ரெய்லருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் கோர்ட்டில் மனு அளித்தார். அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். பிகில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத பிரச்சினை ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க சமீபத்தில்தான் யூஏ சான்று வழங்கப்பட்டது.

தற்போது தீர்ப்பு சொல்லாமல் ஒத்தி வைத்திருப்பதால் பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் பிகில் திரைப்பட ரிலீஸை எண்ணி சோகத்தில் உள்ளனர். தீபாவளிக்கு முன்பாகவே தீர்ப்பு வெளியாகி பிகில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீ மறைந்திருக்கலாம்… ஆனால் மறக்கப்படவில்லை – தங்கை குறித்து உருக்கமாகப் பதிவிட்ட சிம்ரன்!

குட் பேட் அக்லி கொண்டாட்டம் முடியும் முன்னரே அஜித் ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments