Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை? நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

Advertiesment
பிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை? நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (09:09 IST)
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்திற்கு விளக்கமளிக்க கோரி படக்குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வேடத்தில் பிக்பாஸ் ஜூலி நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை இயக்குநர் அஜய்குமார் என்பவர் ‘டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்’ என்ற பெயரில் எடுப்பதாக கூறப்பட்டது. 
webdunia
இதுகுறித்து கேள்விபட்டு அதிர்ச்சியடைந்த அனிதாவின் தந்தை, இந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து 22-ம் தேதிக்குள் படத்தின் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதற கதற காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது ஏன்? பிரபலத்தின் விளக்கம்