Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை: இன்று அல்லது நாளை என தகவல்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (13:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் என்பதும் இந்த படப்பிடிப்பு குழுவினர்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நடிகர் ரஜினிகாந்த் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் ரஜினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை திரும்பி வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது 
 
மீண்டும் பரிசோதனை செய்வதற்கு என்ன காரணம்? என்றும் ஒருவேளை அவருக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்ததா? என்றும் சந்தேகத்தை ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் அடுத்த கட்ட கொரோனா பரிசோதனையின் ரிசல்ட் நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments