Publish Date: Thu, 24 Dec 2020 (11:19 IST)
Updated Date: Thu, 24 Dec 2020 (11:29 IST)
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப் பணமும் பொருட்களும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. அதே போல் 2021 ஆண்டும் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் அறிவவித்தனர். மேலும் பணத்தோடு ஒரு கரும்பு, வெல்லம், சர்க்கரை முந்திரி திராட்சை ஆகியவற்றையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த பொருட்களை எல்லாம் தமிழகம் முழுவதும் ஜனவரி 4 ஆம் தேதி 13 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்.