கொரோனா குமார் படம் எப்போது தொடங்கப்படும்… இயக்குனர் கோகுல் தகவல்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (14:11 IST)
இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்க முயற்சிகளில் ஈடுபட்டார்.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க இருந்தார்.

ஆனால் இடையில் சிம்பு அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று விலகியதாக சொல்லப்பட்டது. இதனால் கோகுல் இப்போது ஆர் ஜே பாலாஜியை கதாநாயகனாக்கி சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை குறுகிய காலத்தில் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் சிங்கப்பூர் சலூன் ரிலீஸ் ஆனதும், அந்த படத்துக்கான வேலைகள் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments