Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

80 களின் சூப்பர் ஸ்டாருக்கு கொரொனா தொற்று...ரசிகர்கள், திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சி

Advertiesment
80 களின் சூப்பர் ஸ்டாருக்கு கொரொனா தொற்று...ரசிகர்கள், திரை நட்சத்திரங்கள்  அதிர்ச்சி
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (19:51 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,560  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,25,420   ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இக்கொரொனா தொற்றுக்கு ஏழை- பணக்காரன் என்ற வேற்றுமை இல்லாமல் பலரும் பாதிக்கப்படு வருகின்றனர். சமூக சேவை செய்வோர், எம்.பி,எம்.எல்.ஏக்கள், நடிகர்கள் என அனைவரையும் தாக்கி வரும் கொரோனா தொற்றுக்கு யாரும் விதி விலக்குஇல்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில்  90 களின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ராம்ராஜுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரக்காட்டக்காரர், வில்லுப்பாட்டுக்காரன், மேதை உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்குச் சொந்தக்காரரான் ராம்ராஜுக்கு கொரொனா தொற்று உறுதியானதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் ரிலீஸ் …வைரல் வீடியோ