Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா!!

Advertiesment
கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா!!

J.Durai

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:24 IST)
வீ எண்டர்டெயின் மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்,2024 - ஆண்டிற்கான கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடை பெற உள்ளது.
 
இந்த ஆண்டு  ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
 
242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன.
 
மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உரையாட விருக்கிறார்கள்.
 
எதிர்கால திரைப்பட இயக்குநர்களுக்கு ஊக்கமாக அமையும்
இந்த உலக சினிமா விழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘3 மணிநேரமா என நாங்களும் பயந்தோம்’… GOAT படத்தின் ரன்னிங் டைம் பற்றி பேசிய வெங்கட் பிரபு!