Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்காது… தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் காரணம்!

vinoth
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (09:56 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து முதல்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக ‘கூலி’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழ் சினிமா தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் கூறியுள்ளார். இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “ஒரு படம் 1000 கோடி வசூலிக்க வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கவேண்டும். கூலி படம் 650 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும். 1000 கோடி ரூபாய் வசூலுக்கான வாய்ப்பு மிகக் குறைவு” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments