Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூல் சுரேஷ் வீட்டு பூஜையறையில் ஐசரி கணேஷ் … வைரலாகும் புகைப்படம்!

கூல் சுரேஷ் வீட்டு பூஜையறையில் ஐசரி கணேஷ் … வைரலாகும் புகைப்படம்!
, புதன், 28 செப்டம்பர் 2022 (09:06 IST)
நடிகர் கூல் சுரேஷுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி பேசி பிரபலமானார் கூல் சுரேஷ். பல திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று மிகை உணர்ச்சியோடு அவர் பேசுவது ரசிகர்களுக்கு வேடிக்கையாக அமைந்தது. மேலும் கூல் சுரேஷ் பணம் வாங்கிக் கொண்டு படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று கருத்துகளும் எழுந்தன.

இதனால் இப்போது வரும் படங்களை அவர் விமர்சனம் செய்து வீடியோவாக போடுவது ஒரு சடங்கு போலவே ஆகிவிட்டது. இந்நிலையில் இப்போது இதைவைத்து தியேட்டர் உரிமையாளர்கள் கல்லா கட்ட முடிவு செய்துள்ளனர். சென்னையின் பிரபல திரையரங்கம் சில யுட்யூப் சேனல்களுக்கு “எங்கள் திரையரங்குக்கு கூல் சுரேஷ் திரைப்படம் பார்க்க இந்த தேதியில் வருகிறார்” என சொல்லி பப்ளிக் ரிவ்யூ எடுக்க வர சொல்லி குறுஞ்செய்து அனுப்புகிறார்களாம். அந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளார் கூல் சுரேஷ்.

இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷுக்கு சிறப்பு பரிசை அளித்துள்ளார். புதிய ஆப்பிள் ஐபோனை பரிசளித்த ஐசரி கணேஷ், மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கூல் சுரேஷ் நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து கூல் சுரேஷின் புகைப்படத்தை தன்னுடைய வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபடுவது போன்ற புகைப்படத்தை கூல் சுரேஷ் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தியில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியீடு… தேதி அறிவிப்பு