Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாமு & வெங்கடேஷ் பட்டை அடுத்து குக் வித் கோமாளியில் இருந்து விலகிய இயக்குனர் பார்த்திபன்!

Advertiesment
தாமு & வெங்கடேஷ் பட்டை அடுத்து குக் வித் கோமாளியில் இருந்து விலகிய இயக்குனர் பார்த்திபன்!

vinoth

, செவ்வாய், 5 மார்ச் 2024 (07:04 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி குக் வித் கோமாளி, புகழ், அருண்விஜய், cooku with comali, arun vijay, pughazஅனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் சினிமாவில் கதாநாயகனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அதில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று வந்த நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் அடுத்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்திபனும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சில குட்பைகளை சொல்வது மிகவும் கடினம். ஆனால் சந்தோஷமான நினைவுகளோடு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். நான்கு சீசன்களிலும் ஒரு குடும்பமாக அனைவரும் செயல்பட்டோம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்திற்கு நன்றி. உங்களுக்கு நன்றிக்குரியவான இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் கங்குவா டீசர் தயார்… ரிலீஸ் ஆகப்போவது எப்போது?