குக் வித் கோமாளி அஸ்வினின் சர்ச்சை பேச்சு… கொதிக்கும் உதவி இயக்குனர்கள்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (09:51 IST)
சமீபத்தில் நடந்த ஆடியோ விழாவில் பேசிய அஸ்வின் குமார் எல்லை மீறி பேசியதால் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் ‘நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.’ எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்னும் ஒரு படம் கூட நடிக்காமல் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து சிக்கலில் சிக்கியுள்ளார் கோமாளி அஸ்வின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments