பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றவர் நடிகை ஓவியா. இன்றைய புரோமோ வீடியோவில் ஓவியா அழுவது போல காண்பிக்கப்பட்டது. அதில் சிநேகன் சமாதானம் செய்வது போலவும் உள்ளது.
இதனை தொடர்ந்து ஓவியா ஏன் அழுதார், யாரும் அவரை அழவைத்தார்கள் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
பிக் பாஸ் வீட்டில் சிநேகன்தான் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக கேட்டு அதை விசாரிக்கிறார். இந்நிலையில் இந்த வாரமும் சிநேகன்தான் இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் ஓவியாவிற்கும் ஆரம்பத்தில் சிறிது மோதல் இருந்து வந்தது. புரோமோ வீடியோவில் சிநேகன் ஓவியாவை ஜுலி என்று அழைத்துள்ளார், ஆனால், அதை தொடர்ந்து என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஓவியா மிகவும் வருத்தப்பட்டு அழ, சிநேகன் சமாதானம் செய்ய முயற்கிக்கிறார். அது ஏன் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.