Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தடை கோரி புகார் !

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (16:56 IST)
இத்திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் "ஆடி குத்து" என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து  "பகவதி பாபா" என்ற இரண்டாவது பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தோணி தாசன் பாடியுள்ள இந்த பாடலுக்கு பா. விஜய் லிரிக்ஸ் எழுதியுள்ளார். இந்த பாடல் பக்தியின் பெயரில் மக்களை ஏமாற்றும் போலி சாமியாரின் லீலைகள் பற்றி கூறுகிறது. இந்த பாடலில் கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் சாமியார் கூத்தடிப்பதெல்லாம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல் வீடியோ...

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் பட டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்திற்கு தடை கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், சிறுபான்மை மக்களைக் கொச்சை படுத்தும் வகையில் இப்படத்தில் காட்சிகள் உள்ளதால் இப்படத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளதால் இப்படம் வெளியாகுமா ?? என்ற கேள்வி எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்