Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பிரபல நடிகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (22:35 IST)
நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்நிலையில், உபி., மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஆக்ஸிஜன் தடுப்பாடு என்று கூறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் ; அவர்களின் சொத்துகள் பறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,. பொய் சொன்னால் ஓங்கு அறைவேன் என தெரிவித்தார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது

இந்நிலையில், நடிகர் சித்தார்த்திற்கு பாஜகவிடம் இருந்து மிரட்டல் வருவதாக அவர் டுவீட் செய்தார். இதற்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதே முதல்வரை அவதூறாகப் பேசியதல நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் எனபவர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் சித்தார்த் மீது ஒரு புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக ஐடி பிரிவினர் என் தொலைப்பேசி எண்ணைக் கசியவிட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு என் குடும்பத்தினருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட் அச்சுறுத்தல்களும், பாலியல் ரீதியான மிரட்டல்களும் வந்துள்ளன. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதை நான் காவல்துறையில் ஒப்படைக்கவுள்ளேன். நான் வாய் மூடி இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திர மாநில அரசியலில் நடிகர் விஜய் ?….வைரலாகும் போஸ்டர்