Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தேவரகொண்டாவின் "கொமோசாவா பாரிஸ்" - கொண்டாடும் ரவுடி ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:08 IST)
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து நோட்டா , டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து கலெக்ஷனில் கல்லா கட்ட செய்தார்.
 
தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். 
 
கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து வெளிவந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இடம்பெறும் Comosava Paris என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. ப்லைட்டில் இருந்து வெளியில் குதித்து வானில் பறந்தபடி உலகை ரசிக்கிறார் விஜய். வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இப்பாடலின் visual ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments