Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் விஸ்வரூபம் 2 - படுக்கையில் இருந்தாலும் பரபரவென இயங்கும் கமல்

விரைவில் விஸ்வரூபம் 2 - படுக்கையில் இருந்தாலும் பரபரவென இயங்கும் கமல்

விரைவில் விஸ்வரூபம் 2 - படுக்கையில் இருந்தாலும் பரபரவென இயங்கும் கமல்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (15:25 IST)
கமலுக்கு ஓய்வு என்பது சினிமா குறித்து புதிதாக ஏதாவது ஒன்றை படிப்பதுதான் என்று ஒருமுறை கமலின் அண்ணன் சந்திரஹாசன் கூறினார்.


 


பம்பரமாக சுழன்று கொண்டிருந்தவர் கால் எலும்பு முறிவு காரணமாக இப்போது படுக்கையில் இருக்கிறார். காலை முடக்கலாம், மூளையை?
 
சபாஷ் நாயுடு படத்திற்கு பல பிரச்சனைகள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று ஒவ்வொருவராக, வெவ்வேறு காரணங்களுக்காக விலகிவிட்டனர். இன்னும் ஒரு மாத கால ஓய்வுக்குப் பிறகுதான் சபாஷ் நாயுடு குறித்தே கமலால் யோசிக்க முடியும். படம் திட்டமிட்டதைவிட பல மாதங்கள் தள்ளிப் போகும். 
 
இதையெல்லாம் கணக்கில் கொண்டு, முடங்கிக் கிடக்கும் விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து வாங்கி வெளியிடும் முயற்சியில் கமல் இறங்கியுள்ளார். கடனில் மூழ்கியிருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அது கை கொடுத்தது போலிருக்கும்.
 
கமலின் விருப்பப்படி அனைத்தும் நடந்தால் தீபாவளிக்கே விஸ்வரூபம் 2 படத்தை ரசிகர்கள் திரையில் ரசிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசிய வரலாற்றை தேட வைத்த ‘கபாலி’ - உணர்ச்சி பெருக்கில் தமிழர்கள்