Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசிய வரலாற்றை தேட வைத்த ‘கபாலி’ - உணர்ச்சி பெருக்கில் தமிழர்கள்

மலேசிய வரலாற்றை தேட வைத்த ‘கபாலி’ - உணர்ச்சி பெருக்கில் தமிழர்கள்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (15:23 IST)
கபாலி திரைப்படம் வெளியானதை அடுத்து மலேசிய வாழ் தமிழர்கள் தங்களது வம்சாவளி மக்களை குறித்தான தேடலில் இறங்கியுள்ளதாக அங்குள்ள தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


 

கபாலி திரைப்படம் கடந்த வாரம் 22ஆம் தேதி [வெள்ளிக்கிழமை] வெளியானதை அடுத்து படம் குறித்த விமர்சனங்கள் பலவாறு பறந்து கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி தோல்வி குறித்து ஒருபுறம் விவாதமும், கபாலி படம் தலித் மக்களைப் பற்றி பேசுகிறது என்று படத்தின் அரசியல் தன்மை ஒருபுறமும், வைரமுத்து, சாரு நிவேதிதா, மிஷ்கின், சமுத்திரகனி போன்றோரின் விமர்சனம் ஒரு பக்கமும், ரஞ்சித் மீதான விமர்சனம் ஒருபுறமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் அவர்களின் முகநூல் பக்கத்தில் மனோகர் கோவிந்தன் என்ற மேலேசியா வாழ் தமிழர் எழுதியுள்ள பின்னூட்டத்தில், ”கடந்த வியாழக்கிழமையிலிருந்து மலேசிய வாழ் இந்திய இளைஞர்கள் "கபாலி" திரைபடத்தை பற்றிய பேச்சு ஸ்டைலையோ, நடிப்பையோ, நடிகர்களையோ, திரைகதையையோ இல்லை.
 
நம் முன்னோர்கள் இந்நாட்டின் (மலாய / மலேசியா) வளர்ச்சியில் எவ்வளவு பங்காற்றியுள்ளனர், இந்திய வம்சாவளி மக்களின் நலன் காக்க போராடி உயிர் நீத்த தலைவர்கள் பற்றியே, தற்போது அவர்களின் தகவல்கள் தேட இணைய தளங்களையும் மற்றதகவல் மையங்களையும் நாட ஆரம்பித்துள்ளனர்.
 
இம்மாற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த "கபாலி" திரைபடத்திற்கும் அதை இயக்கிய பா.ரஞ்சித்திற்கும் நன்றிகள் பல. இங்கு ஜாதிக்கோ மதத்திற்கோ இனத்திற்கோ இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர்களுக்கு எதிராக திடீர் போராட்டத்தில் இறங்கிய இயக்குனர்கள்