Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமெடி நடிகர் முனிஷ்காந்த் திருமணத்தில் ஒரு ஆச்சரியம்

Advertiesment
காமெடி நடிகர் முனிஷ்காந்த் திருமணத்தில் ஒரு ஆச்சரியம்
, திங்கள், 26 மார்ச் 2018 (11:42 IST)
பிரபல தமிழ் காமெடி நடிகர் முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

முண்டாசுப்பட்டி, பசங்க 2 உள்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகர் முனிஷ்காந்த், இன்று காலை சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து செய்து வைத்த இந்த திருமணத்தில் இருதரப்பு உறவினர்களும் நண்பர்களும் சக நடிகர்களும் கலந்து கொண்டனர்.

webdunia
நடிகர் முனிஷ்காந்த் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர். ஆரம்பகாலத்தில் சென்னையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் எத்தனையோ நாள் வடபழனி கோவில் முன்புதான் தூங்கியிருக்கின்றார். இன்று அதே கோவிலில் அவரது திருமணம் நடைபெற்றது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நயன்தாரா மீது பட தயாரிப்பாளர்கள் பரபரப்பு புகார்