Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோமாளி இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்… விஜய்யின் ஹிட் பட தலைப்பு!

கோமாளி இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்… விஜய்யின் ஹிட் பட தலைப்பு!
, திங்கள், 4 ஜூலை 2022 (09:02 IST)
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் அடுத்து நாயகனாக ஒரு படத்தில் நடித்து அந்த படத்தை இயக்கவும் செய்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கோப்ரா’ வின் உயிர் உருகுதே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!