ஒரு வழியாக ரிலீஸை நெருங்கிய கோப்ரா… வெளியான அப்டேட்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:36 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் நீண்ட நாள் இழுபறிக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் மூன்று வருட கால தாமதம், இயக்குனரின் சரியான திட்டமின்மை ஆகியவற்றால் பட்ஜெட் இப்போது 87 கோடி ரூபாய் ஆகிவிட்டதாம். இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பட்ஜெட் அதிகமானதற்கு தான் காரணமில்லை என்று கூறியிருந்தார்.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் என்றால் அது ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படம்தான். அந்த படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என சொலல்ப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அதனை வியாபாரம் செய்ய முடிந்தது. ஆனால் கோப்ரா படத்தினை இவ்வளவு பெரிய தொகைக்கு எப்படி தயாரிப்பாளர் வியாபாரம் செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் கோப்ரா ரிலிஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments