Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு விருதா? முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

the kashmir files1
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:33 IST)
நேற்று அறிவிக்கப்பட்ட 69வது தேசிய விருதுகளில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது அளித்ததற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
69வது தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!  விஜய்சேதுபதி, மணிகண்டன் மற்றும் நல்லாண்டி ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
 
மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
 
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமாவில் முதல் நடிகர்… தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு குவியும் பாராட்டுகள்!