ஹாலிவுட் திரைப்படங்களுக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்த ஓப்பன்ஹெய்மர் விருதுகள் பல வென்றுள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் ஆஸ்கர் விருதின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த கோல்டன் க்ளோபில் விருது வெல்லும் படங்கள் பெரும்பாலும் ஆஸ்கர் விருதையும் வெல்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான படங்களுக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபென்ஹெய்மர் திரைப்படம் சிறந்த நடிப்பு மற்றும் இயக்கத்திற்கான விருதை வென்றுள்ளது. ஜப்பானிய அனிமே இயக்குனர் ஹயாவோ மியாசாகியின் கடைசி படமான The Boy and the Heron சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை வென்றுள்ளது.
விருது வென்ற சில முக்கியமான படங்கள் குறித்த பட்டியல்
-
சிறந்த திரைப்படம் (ட்ராமா) – ஓப்பன்ஹெய்மர்
-
சிறந்த நடிகை (ட்ராமா) – லில்லி க்ளாட்ஸ்டோன், கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்
-
சிறந்த நடிகர் (ட்ராமா) – சிலியன் மர்ஃபி, ஓப்பன்ஹெய்மர்
-
சிறந்த இயக்குனர் – கிறிஸ்டோபர் நோலன், ஓப்பன்ஹெய்மர்
-
சினிமாட்டிக் பாக்ஸ் ஆபீஸ் சாதனை – பார்பி
-
சிறந்த டிவி தொடர் – சக்ஸசன்
-
சிறந்த திரைப்படம் (காமெடி, மியூசிக்கல்) – புவர் திங்ஸ்
-
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – தி பாய் அண்ட் தி ஹெரான்
-
சிறந்த பின்னணி இசை – லுட்விக் கொரன்ஸன், ஓப்பன்ஹெய்மர்
-
சிறந்த வெளிநாட்டு படம் – அனாடமி ஆஃப் ஃபால்
Edit by Prasanth.K