கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் திரைப்படத்தின் வசூல் குறித்து ஸ்டுடியோக்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளன என நோலன் கூறியுள்ளார்.
டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் கொரோனா காரணமாக நீண்ட கால தாமதத்துக்குப் பின் நாளை வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பைரசியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் வசூலில் தோல்வி அடைந்ததாக சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் அதை மறுத்துள்ளார் நோலன். இந்த படத்தின் வசூல் எங்களுக்கு நிறைவை அளித்துள்ளன. ஆனால் மற்ற ஸ்டூடியோக்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இந்த படத்தை தற்போதைய மார்க்கெட் நிலவரத்தின் படிதான் அணுக வேண்டும். அதைவிட்டுவிட்டு கொரோனாவுக்கு முந்தைய நிலவரத்தை வைத்து அணுகினால் தவறாகதான் முடியும் எனக் கூறியுள்ளார்.