Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு Common DP வெளியிட்ட கோப்ரா இயக்குனர்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:11 IST)
விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் நாளை பிறந்த நாள் கொண்டாடாவிற்கும் விக்ரமிற்கு ஸ்பெஷலாக கோப்ரா படக்குழுவினரிடமிருந்து நிச்சயம் ஏதாவது அப்டேட் வரும் என சியான் ரசிகர்கள் காத்திருக்கின்ற வேளையில் சற்றுமுன் இப்படத்தின் இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமின் பிறந்தநாளிற்கு அட்வான்ஸ் சர்ப்ரைஸ் ஆக காமன் DP ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை விக்ரம் நடித்துள்ள அனைத்து பட கேரக்டர்களும் அடங்கிய இந்த போஸ்டர் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments