விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சியான் 60 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பை பதிவு செய்ய சென்ற போது ஏற்கனவே அந்த தலைப்பு பதிவாகி இருக்க, அதை 7 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்களாம்.