வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடித்தது ஏன்?... சிரஞ்சீவி அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

அந்த வகையில் அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார். படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிரஞ்சீவியிடம் ஏன் ரீமேக் படங்களிலேயே நடிக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு “ஏன் ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது. கதை நன்றாக இருக்கும்போது… வேதாளம் படம் எந்த ஓடிடியிலும் இல்லை. அதனால்தான் அதன் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments