Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோல்களுக்கு ஆளாகும் சிரஞ்சீவியின் காட்பாதர்… ஓ இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:44 IST)
சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

மேலும் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் கான் நடிக்கும் நேரடி முதல் தென்னிந்திய மொழி திரைப்படமாக காட்பாதர் அமைந்துள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது காட்பாதர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் சில ஆக்‌ஷன் காட்சிகளில் சிரஞ்சீவியை மோகன்லாலோடு ஒப்பிட்டு இணைய வாசிகள் மீம்களையும் ட்ரோல்களையும் உருவாக்க ஆரம்பித்துள்ளனர். லூசிபர் படத்தின் மோகன்லாலின் ஆக்‌ஷன் காட்சிகளும் அடக்கமான நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் காட்பாதர் திரைப்படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக மசாலா சேர்த்து உருவாக்கியுள்ளதாக டிரைலரைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments