Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸுக்கு ‘டிமிக்கி’ குடுக்கும் மீரா மிதுன்? – தேடுதல் வேட்டையில் போலீஸ்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:32 IST)
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுனை போலீஸார் கைது செய்யாதது குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அதன்பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மீராமிதுன் தலைமறைவானார்.

ALSO READ: தனுஷின் ‘நானே வருவேன்’ இன்று ரிலீஸ்: திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்!
 
அதை தொடர்ந்து மீராமிதுனை போலீஸார் சேத்துப்பட்டு மற்றும் வேளச்சேரியில் தேடினர். அங்கு கிடைக்காத நிலையில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கும் தேடியுள்ளனர். ஆனால் அங்கும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைது வாரண்ட் பிறப்பித்து 2 மாதங்களாகிவிட்ட நிலையிலும் காவல்துறை சரியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து மீரா மிதுனை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments