Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் ராதாரவி – மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சின்மயி !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (08:39 IST)
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் சேர்ந்திருப்பது சம்மந்தமாக பாடகி சின்மயி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடகி சின்மயி மீ டூ பிரச்சனையின் போது பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் மீதானக் குற்றச்சாட்டுகளை பரவலாக கவனம் பெறச்செய்தார். இதனால் அவருக்கு படங்களில் பாடும் வாய்ப்புகள் குறைந்தன. மேலும் நடிகர் ராதாரவி தலைவராக இருக்கும் டப்பிங் யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதனால் ராதாரவி மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனை பாஜக ஆதரவாளர்கள் ஆதரித்தனர்.

இப்போது ராதாரவி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து அதிருப்தியடைந்த சின்மயி ‘ ராதாரவி டப்பிங் யூனியனில் இருந்தபோது பெண்கள் பிரச்சனை என்றாலே காது கொடுத்து கேட்க மாட்டார். இப்போது அவர் பாஜகவில்… இது பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments