Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அச்சச்சோ, எல்லாம் போச்சே! அமெரிக்காவில் புலம்பிய பாடகி சின்மயி

Advertiesment
, செவ்வாய், 9 மே 2017 (22:44 IST)
பாடகி சுசித்ரா லீக் விவகாரத்தில் இருந்து இப்போதுதான் பாடகி சின்மயி தப்பித்து ஒரு வழியாக மீண்டு வந்துள்ளார். ஆனால் அதற்குள் அவருக்கு இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது.



 


இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்காவின் சான்பிராசிஸ்கோ நகருக்கு சென்ற சின்மயி, அங்கு காரை ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு ஷாப்பிங் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தால் எல்லாமே அம்போ. காரை உடைத்து யாரோ மர்ம நபர்கள் சின்மயி காரில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துள்ளனர். காரும் படுபயங்கரமாக டேமேஜ் ஆகியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மயி, போலீசிடம் புகார் கொடுக்க சென்றால் அங்கு அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சான்பிராசிஸ்கோவில் காரில் திருடுபோவது சகஜம்தான் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நல்லவேளையாக காரில் திருடியவர் ஒரு பெண் என்றும் அவருக்கு தலையில் சிகப்பு முடி இருக்கின்றது என்றும் தெரிந்துள்ளதால் திருடிய நபரை எளிதில் பிடித்துவிடலாம் என்று சின்மயிக்கு போலீசார் ஆறுதல் கூறியுள்ளார்களாம். இருப்பினும் காரில் உள்ள பொருட்கள் திருடு போனதை நினைத்து புலம்பியபடியே உள்ளாராம் சின்மயி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் பிறந்த நாளில் கொழுந்தியாள் செளந்தர்யா கொடுத்த மறக்க முடியாத பரிசு