Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து தங்கமானவர்: சின்மயி கூறுவது பொய்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (21:07 IST)
தமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயிதான் சினிமா துறையில் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக தெரிவித்தார். அது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.   
 
அதிலும் குறிப்பாக வைரமுத்து பற்றி இரண்டு நாட்களாக அவர் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயி-யின் தாயாரும் இது குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிகாக சென்ற போது வைரமுத்துவால் என் மகள் பாலியல் அழுத்தத்திற்கு உள்ளானாள். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம் என குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், இது குறித்து அந்த நிகழ்ச்சியின் ஒறுங்கிணைப்பாளார் சுரேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், அவர், சின்மயி மற்றும் அவரது தாயார் பொய் கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது இருவரும் எனது வீட்டில்தான் தங்கினார்கள். அவர்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. 
 
மேலும், சின்மயி இது போன்ற பொய்யான தகவல்களை வெளியிடுவதையும், சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்