Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க அம்மா கருத்துக்கு அவங்கதான் பொறுப்பு – கழண்டுகொண்ட சின்மயி !

Advertiesment
எங்க அம்மா கருத்துக்கு அவங்கதான் பொறுப்பு – கழண்டுகொண்ட சின்மயி !
, செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:46 IST)
தேவதாஸி முறை பற்றி என் அம்மா சொன்னது அவர்களது கருத்து; எனக்கு அதில் உடன்பாடில்லை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மீ டு விஷயங்களை பகிரங்க படுத்திய சின்மயி புகழடைந்ததை விட அவரது தாயார் சமூக வலைதளங்களில் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இதையடுத்து அவர் சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் பேசியபோது ‘ தேவதாஸி முறை இந்த மண்ணின் சிறந்த முறை. அதை ஒழித்ததற்காக பெரியாரை என்னால் மன்னிக்க முடியாது’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

அவரது பேச்சுக்கு சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கண்டனம் தெரிவிக்க, பாடகி சின்மயி, தனது அம்மாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டரில் ‘தேவதாசி முறையை நான் complete ஆ எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல.  எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை. அவங்க actionsகு அவங்கதான் responsible. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன் for justifiably hurt sentiments’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்