Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரவணன் அதிரடியாக வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா? உடைந்தது பிக்பாஸின் ரகசியம்!

Advertiesment
சரவணன் அதிரடியாக வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா? உடைந்தது பிக்பாஸின் ரகசியம்!
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (10:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறிய காரணத்தால் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் அது மட்டும் காரணமில்லை சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் என்று தற்போது  இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 


 
சரவணன் கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறியது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது வந்தது.  இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக்பாஸ். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டு இத்தனை நாட்களுக்கு பின்னர் திடீரென அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர். 
 
அந்த வகையில் பெண்ககள் விவகாரத்தை காரணம் காட்டி சேரனை பகைத்து கொண்டதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சேரன் சரவணனுக்கு நடந்த சண்டையில் "நான் கதாநாயகனாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரெக்டராக  வேலைபார்த்தவன் தானே" என சரவணன் சேரனை ஏளனமாக பேசியதால் கடந்த சனிக்கிழமை இந்த பிரச்சனை குறித்து பேசிய கமல், சரவணன் செய்தது தவறு என்று அறிவுறுத்தி பின்னர்  சேரனிடம் மன்னிப்பும் கேட்க சொன்னார். உடனே சரவணன் சேரனின் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டார்.  மன்னிப்பு கேட்டு இத்தனை நாட்கள் ஆகிய நிலையில் தற்போது அவர் திடீரென்று வெளியேற்றபட காரணம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

webdunia

 
அந்தவகையில் தற்போது சரவணன்வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் என கூறப்படுகிறது. சேரன் தனக்கு இருக்கும் பலத்தை வைத்து பிக்பாஸிற்கு நெருக்கடி கொடுத்து சரவணனை வெளியேற்ற செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது . இருந்தும் இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. 
 
அதுமட்டுமின்றி இன்னொரு ரகசிய தகவலும் லீக்காகியுள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் யாரேனும் சேரனுடன் பகைத்துக்கொண்டாள் உடனே வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். முதலில், மீரா மிதுன். இவர் கிராமம் டாஸ்க்கின் போது சேரன் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக மோசமான புகார் ஒன்றை முன்வைத்தார். பின்னர் தொடர்ந்து கிராமம் டாஸ்க்கின் போது தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறி, சேரனை ரேஷ்மா நாமினேட் செய்தார். அதனால் கடந்த ஞாயிற்று கிழமை வெளியேற்றப்பட்டார். தற்போது மூன்றாவது நபராக சேரனுடன் பகைத்துக்கொண்ட சரவணனும் வெளியேற்றப்பட்டுள்ளார். 
 
இதை வைத்து பார்க்கையில் சேரனுடன் யார் பகைத்துக்கொண்டாலும் அவர் அதிரடியாக வெளிடியேற்றப்படுகிறார் என்ற ரகசிய தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?