Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதிக்காதவர்களை சென்னையில் இருந்து அனுப்பிவிடுங்கள்: முதல்வருக்கு சேரன் கோரிக்கை

Advertiesment
கொரோனா பாதிக்காதவர்களை சென்னையில் இருந்து அனுப்பிவிடுங்கள்: முதல்வருக்கு சேரன் கோரிக்கை
, புதன், 17 ஜூன் 2020 (19:48 IST)
கொரோனா பாதிக்காமல் சென்னையில் இருக்கும் பிற மாவட்ட மக்களை தகுந்த சோதனை செய்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்று தமிழக முதல்வருக்கும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்..
 
15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தங்கியவர்கள் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன்மூலம் பரவும் அபாயம் இருக்கிறது
 
எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.
 
மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.
 
இவ்வாறு இயக்குனர் சேரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்புள்ள அப்பா... டிடியின் எமோஷனல் கடிதம்.