Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் தான் ஜெயிப்பேன்: தன்னம்பிக்கையுடன் கூறும் சேரன்

Advertiesment
நான் தான் ஜெயிப்பேன்: தன்னம்பிக்கையுடன் கூறும் சேரன்
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (09:30 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் சேரன் வெளியேறினாலும் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் போட்டியில் தற்போது கலந்து கொண்டுள்ளார். தர்ஷன், முகின், சாண்டி ஆகிய இளைஞர்களுக்கு இணையாக டாஸ்க் உள்பட அனைத்தையும் சிறப்பாக செய்து கடும் போட்டியாளராக இருக்கும் சேரன், இன்றைய புரமோவில் தான் டைட்டில் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்
 
இன்றைய டாஸ்க்கின்போது சேரன் கூறும்போது, ’ஃபர்ஸ்ட்டுன்னா நான் தான் முதலில் இருக்கணும் என்று தர்ஷனின் புகைப்படத்தை முதல் இடத்தில் இருந்து அகற்றிவிட்டு தன்னுடைய புகைப்படத்தை வைக்கும் சேரன், ‘இங்க இருக்கிற எல்லாரையும் விட எனக்கு வயதும் அனுபவமும் அதிகம். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும்போது ‘இளைஞர்கள் தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள், உனக்கென்ன அங்கே வேலை’ என்று கேட்டார்கள்.  இங்கே இருக்கும் அனைவருக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருக்கலாம், ஃபாலோயர்ஸ்கள் இருக்கலாம், ஆர்மிகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் எனக்கு ஃபாலோயர்கள் என்பதால் நான் இந்த போட்டியில் நிச்சயம் ஜெயிப்பேன், என்று தன்னம்பிக்கையுடன் சேரன் கூறுகின்றார்.
 
தர்ஷன், முகின், சாண்டி ஆகிய மூவரில் ஒருவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சேரன் அவர்கள் மூவருக்கும் கடுமையான போட்டியை கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா இதுவரை நடிக்காத கேரக்டர்: ‘நெற்றிக்கண்’ குறித்த புதிய அப்டேட்