Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'முத்துராமலிங்கம்' படத்தை உடனடியாக நிறுத்த சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

'முத்துராமலிங்கம்' படத்தை உடனடியாக நிறுத்த சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (21:46 IST)
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'முத்துராமலிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் உடனடியாக அனைத்து திரையரங்குகளிலும் இந்த படத்தை நிறுத்துமாறு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




'முத்துராமலிங்கம்' படத்தின் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் என்பவர் எம்.வி.பிரகாஷ் என்பவரிடம் வாங்கிய ரூ.29 லட்சம் கடனை திருப்பித்தரவில்லை என்பதால் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இந்த அதிரடி தடையை பிறப்பித்துள்ளது.

இந்த தடை காரணமாக உடனடியாக தமிழகம் முழுவதும் இன்றைய படக்காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜதுரை என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தங்க செயின் பரிசு கொடுத்தது 'பைரவா' வெற்றிக்கு இல்லையாம்?