Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு காத்திருக்கும்: சென்னை மாநகர காவல் துணை ஆணையர்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (00:50 IST)
தமிழ் சினிமாவுக்கு தற்போது நல்ல நேரம் போலும், கடந்த வாரம், அறம், இந்த வாரம் தீரன் அதிகாரம் ஒன்று என வாரவாரம் அனைவரும் போற்றும் படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது.



 


இந்த நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே கார்த்தி, வினோத் உள்பட படக்குழுவினர்களுக்கு டிஜிபி ஜாங்கிட் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு உண்மைக் கதையை ( பவேரியா கொள்ளை கூட்டத்தை டிஜிபி ஜாங்கிட் ஐபிஎஸ் தலைமையிலான குழு கண்டுபிடித்து கைது செய்த நிகழ்வு) படமாக்க முன்வந்து அதனை மிக சுவாரஸ்யமாக படமாக்கிய இயக்குநர் வினோத்திற்கு தமிழக காவல் துறை சார்பாக பாராட்டு பூங்கொத்து.

'காக்க காக்க', 'சிங்கம்' என காவல்துறை சார்ந்த படங்கள் மூலம் காவல்துறை அதிகாரி என்றால் சூர்யாதான் என்ற இடத்திற்கு தற்போது தீரன் கதாபாத்திரம் மூலம் கார்த்தி கடும் போட்டி கொடுக்கிறார். ஒரு நேரடி தேர்வு பெற்ற டிஎஸ்பியை கண்முன் நிறுத்துகிறார். ஆர்ப்பாட்டமில்லா ஆழமான நடிப்பு. கார்த்தியின் கச்சிதமான உடல் மொழிக்கும் நடிப்புக்கும் ஒரு ரிவார்டு பார்சல்.

பாலைவனத்தில் புழுதி பறக்கச் செல்லும் பேருந்து சண்டைக்காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கொடூரமானவன் என்று மட்டும் செல்லாமல் அதற்கான காரணத்தை மொகலாயர் காலத்தோடு சொல்வதில்படம் நெடுக இயக்குநர் மற்றும் குழுவினரின் ஹோம்ஒர்க்கை நாம் உணர முடியும். காவல் துறை காட்சிகளில் டீடெய்லிங் ரொம்ப பக்கா.

காவல் துறை உண்மை நிலையைும், சூழ்நிலை நெருக்கதல்களையும் சேர்த்து படமாக்கியது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களில் தீரனுக்கு கட்டாயம் இடம் உண்டு. தமிழக காவல்துறையில் தீரன்களும் அவர்தம் சாதனைகளும் அதிகம். எனவே 'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு காத்திருக்கும்.

பவேரியா ஆப்ரேசனில் பங்கேற்ற நண்பர்கள் விழுப்பரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments