Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட் பட இயக்குனரை அலையவிட்ட தனுஷ்..!

vinoth
வியாழன், 7 நவம்பர் 2024 (15:26 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் வணிக ரீதியான வெற்றியையும் குவித்தது. இந்த படத்தைத் தயாரித்து நடித்த விஷ்ணு விஷால் படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் விஷ்ணு விஷாலை விட கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்தது.

இந்த ஹிட்டையடுத்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் இயக்குனர் செல்லா அய்யாவு. இந்த படத்தை மதுரை அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் செல்லா ஈடுபட்டார். ஆனால் அவர் சொன்ன திரைக்கதை தனுஷுக்கு பிடிக்காததால் மீண்டும் திருத்தி எழுதி வர சொல்லியுள்ளார்.

இப்படியே சில முறை நடந்தும் தனுஷுக்கு திரைக்கதையில் திருப்தி வராததால் அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் செல்லா அடுத்து விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி அதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments