Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்கர்களின் கேள்விகளுக்கு சாட்டிங் மூலம் பதில் அளித்த ஓவியா

Advertiesment
ரசிகர்கர்களின் கேள்விகளுக்கு சாட்டிங் மூலம் பதில் அளித்த ஓவியா
, வியாழன், 21 டிசம்பர் 2017 (12:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ரசிகர்களுடன் சாட் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஓவியா நேற்று இரவு தனது ரசிகர்கள் ட்விட்டரில் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். சில கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.
சிம்பு, தனுஷ் ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, ஓவியா கூறுகையில், ஒரு மனிதனாக சிம்புவையும், நடிகனாக தனுஷையும் பிடிக்கும் என்றார். உங்களின் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு  சிறந்த ரசிகர்கள் கிடைத்துள்ளதாக கூறி, பறக்கும் முத்தம் கொடுத்தார் ஓவியா.
 
இந்நிலையில் ஆரவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நடிப்பேன் என்று ஓவியா  தெரிவித்துள்ளார். பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா என்று கேள்வி, இல்லை, நான் பல லட்சம் இதயங்களை வென்றுள்ளாதாக கூறியுள்ளார் ஓவியா.
 
உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்ற கேள்விக்கு, என் தந்தை என்று பதில் அளித்துள்ளார் ஓவியா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனாதையாக இருந்தவருக்கு ஆதரவு கொடுத்த பிரபல தொகுப்பாளினி; வைரலாகும் வீடியோ